மகாவலி வலயத்தில் மைத்திரி,விமல்?


மரண தண்டனையை அமுல்படுத்துவதை தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்படும் என, அவர் கூறியுள்ளார்.

மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி  உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இன்று (14) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று மகாவலி எல் வலயத்தினுள் ஆக்கிரமிக்கப்படவுள்ள முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதிகளிற்கு வருகை தந்து திரும்பியுள்ளார்.அங்கு அமைக்கப்பட்டு வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார் .

முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களுடனான 'வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு' என்னும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பனவற்றுக்கு விஜயம் மேற்கொண்டதாக சொல்லப்படுகின்றது.

No comments