அமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரிப்பு

சீனாவின் தயாரிப்பான ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரித்துள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை ஹுவாய் திறன்பேசியின் முதல் அரையாண்டு வருவாய் குறித்து என்றும்  மே மாதத்தில் வருவாய் மிக வேகமாக வளர்ந்தது" என்றும் ஹவாய் தலைவர் லியாங் ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த வருடத்தை விட மிக வேகமாக இந்த வருடம் இடம்பெற்றது. அமொிக்காவின் ஹுவாய் திறன்பேசி குறித்த எதிர்ப் பிரச்சாரம் மற்றும் தடை என்பனவற்றைத் தாண்டி அரையாண்டு வருவாய் 23% அதிகரித்துள்ளது.

ஹுவாயின் கடந்த வருட அரையாண்டு வருவாயை விட இந்த வருடம் 58.28 பில்லியன் டொலர்களால் உயர்ந்துள்ளது. ஹுவாய் திறன்பேசியின் ஏற்றுமதி 118 மில்லியன் யூனிட்களை எட்டியுள்ளது, இது 24% அதிகரித்துள்ளது.

இவ்வருடம் மே மாத நடுப்பகுதியில் அமொிக்காவினால் ஹுவாய் மீதான் வர்த்தகத் தடை விதிக்கப்பட்ட போதும், விநியோகிக்கப்படும் வலைப்பின்னல் கணிசமாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 15% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போதும் இந்த வருடம் முதல் அரையாண்டில் ஹவாய் நிறுவனத்தின் 23% வருவாய் வளர்ச்சியடைந்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments