ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் தேர்தலில் இத்தாலி நாட்டவர் வெற்றி.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவரகாக David-Maria Sassoli எனும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் கடந்த புதன் அன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சோசலிஸ்ட் மற்றும் ஜனநாயகவாதிகளின் முற்போக்கு கூட்டணியின் (S&D) குழுவின் வேட்பாளராக களமிறங்கிய சசோலி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தாலியின் Florence பகுதியைச் சேர்ந்த David-Maria Sassoli க்கு வயது 63 ஆகும். இவர் பிரபலமான பத்திரிகையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments