உருளைக்கிழங்கு பொரியலுக்காக துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள McDonald's உணவகத்தில்  'French Fries' எனப்படும் உருளைக்கிழங்கு வறுவல் சுடச் சுட கிடைக்கவில்லை என்பதற்காக McDonald's உணவகத்தில் துப்பாக்கியால் சுட்ட லில்லியன் டார்வர் (Lillian Tarver) எனும் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உணவகத்திலிருந்து உருளைக்கிழங்கு பொரியலை வாங்கிக்கொண்டு சென்ற அவர், சற்று நேரத்துக்குப் பிறகு திரும்பி வந்துள்ளார்,
 தன்னுடைய உணவு சூடாக இல்லை என்று கோபத்துடன் கூறியிருக்கிறார்.
வாக்குவாதம் மோசமடைய உணவக ஊழியர்களுக்கும் பெண்ணுக்கும் இடையே கைகலப்பு நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகத்திலிருந்து வெளியேறிய பெண் தனது காரிலிருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து சுட்டு பயமுறுத்தியுள்ளார்.
எனினும் சூடாக உருளைக்கிழங்கு பொரியல்தேவையில்ல என்று அதற்காக கொடுத்த  பணம் வாங்கிகொண்டு சென்றுள்ளார்.எனினும் காவல்துறைக்கு தகவல் வழங்கியதால் அவரை பின்தொடர்ந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments