முதல் கேள்வியிலேயே அமைச்சரை மடக்கிய வைகோ! கைதட்டிய மோடி

மாநிலங்கள் அவை எம்பியாக இன்று பதவியேற்றுக்கொண்ட மதிமுக வைகோ விவாதத்தின் போது துணைக்கேள்வி கேட்கும் வாய்ப்பை பெற்றார். அப்போது  இந்தியாவில் மூடப்பட்ட ஆலைகளால் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்பது குறித்து அமைச்சர் பதில் தருவாரா? 

சீனாவிலிருந்து ஆடைகளை பெறும் வங்கதேசத்தினர் அதனை சட்டவிரோதமாக இந்தியாவில் இறக்குமதி செய்வதே இந்த பின்னடைவுக்குக் காரணம். இதனை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஆடைத்துறை  அமைச்சர் ஸ்மிரிதி இரானியிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார். 

அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று வைகோ கூறினார்.

அவரின் கேள்விக்கு சபையில் வரவேற்பு கிடைத்ததோடு பிரதமர் மோடியும் மேசையில் தட்டி உற்சாகப்படுத்திறார்.

இதுகுறித்து மதிமுக தலமையகம் வெளியிட்டுள்ள செயதிக் குறிப்பின் விவரம்

நாடாளுமன்றத்தில் வைகோ முதல் கேள்வி

இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் தமிழில் உளமார உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் கழகப் பொதுச்செயலாளர் வைகோ.

கேள்வி நேரத்தின்போது, 347 ஆவது கேள்வி. இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்த கேள்வி ஆகும்.

ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வைகோ துணைக்கேள்வி எழுப்பியபோது அவர் பேசியதாவது,

“அவைத்தலைவர் அவர்களே 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.”

வைகோ இதைச் சொனானவுடன் அவையில் அமர்ந்து இருந்து பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார்.

வைகோ நூற்பு ஆலைகள் குறித்துப் பேசியதாவது, “பருத்தி விலை பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது.

மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று அமைச்சர் பதில் தருவாரா?

தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை ஏடுப்பாரா? (அமைச்சர் இதை மறுத்தார்)

சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகின்றார்க. அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து  இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவிப்பாரா?”

அமைச்சர் ஸ்மிருதி இரானி: அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை.

வைகோ: உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை.

No comments