உற்சாக வரவேற்பில் எம்பியாக பதவியேற்றார் வைகோ

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளின் பின்  மாநிலங்கள் அவை  எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டார். அவரது பெயரை அறிவித்ததும், மாநிலங்களவை உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழிலேயே பதவியேற்றுள்ள வைகோவுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ‘வாழ்த்துக்கள் வைகோ... சிறுத்தைபோல் நடந்து சென்றாய், செம்மொழி உறுதி பூண்டாய், நிறுத்தவே முடியவில்லை நீள்வழி வடித்த கண்ணீர்
போர்த்திறம் பழக்கு- விட்டுப் போகட்டும் வழக்கு- உன் வார்த்தைகள் முழக்கு- நீ வடக்கிலே கிழக்கு’ என நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

No comments