ஐஎஸ் உறுப்பினரை திருமணம் செய்த ஜெர்மன் பெண்ணுக்கு 5ஆண்டு சிறை!

ஜெர்மனைச் சேர்ந்த  சலைன் எஸ் எனும் பெண்  சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்று இஸ்லாம் மதத்தை தழுவி  இஸ்லாமிய அரசு (IS) குழு உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.

அதேவேளை ஐஎஸ் இயக்கத்தை புகழ்ந்து தனது சமூக வலைதளங்களில் எழுதியதோடு தனது இரண்டு குழந்தைகளையும் ஜெர்மனியில் விட்ட்டுவிட்டு  2013 முதல் ஆகஸ்டு 2017 வரை சிரியாவில்  வாழ்ந்துள்ளார்.
பின்னர் அவர் ஜேர்மனிக்கு திரும்பிய பின்னர், 2018 நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டு, வெளிநாட்டு பயங்கரவாதக் குழுவில் இணைந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டார். அதன் அடிப்படையில் தற்போது 5ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படுள்ளது.

No comments