கண்கட்டு வித்தை நடக்கின்றது?


தமிழ் அரசியல்வாதிகள் தற்போது இலங்கை அரசின் உதவிகளை வைத்து கண்கட்டு வித்தை நடத்துகின்றனரென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் மக்களை சந்தித்த அவர் அங்கு உரையாற்றுகையில் நான் முதலமைச்சராகக்கடமையாற்றிய காலத்தில் இரண்டு மூன்று தடவைகள் இப்பகுதிக்கு வந்திருக்கின்றேன். கொடூர அரக்கர்களின் விமானக்குண்டு வீச்சுதாக்குதலுக்கு உள்ளாகித்தமது இன்னுயிர்களை நீத்தபள்ளிச் சிறார்களின் ஞாபகார்த்த இரங்கல் கூட்டங்களில் இரண்டுமுறை கலந்துகொண்டிருக்கின்றேன் என்று நம்புகின்றேன்.

போரினால் இவ்வூர் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இன்று இங்குவந்திருக்கும் பெண் தலைமைத்துவகுடும்பங்களில் இப்பொழுது இருப்பவர்கள் தம் குடும்பத்தாரைபோருக்கு இழந்தவர்கள். எனவேதான் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைஏற்படுத்தமுடியுமாஎன்றநோக்கில் பலர் சேர்ந்து இன்று இந்தப் புண்ணிய கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளோம். கூட்டுமுயற்சியில் தும்புத் தொழிற்சாலைஒன்றைஅமைப்பதுபற்றித் தெரிந்துகொண்டுமுன் செல்லஉத்தேசித்துள்ளோம். 

2013ம் ஆண்டில் வடமாகாணத்தில் இடம்பெற்றமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுவெற்றியீட்டிமுதலமைச்சராகதெரிவுசெய்யப்பட்டபோதுஎனதுபதவிக் காலத்தில் எமது மக்களுக்கு ஓரளவுசேவைகளை ஆற்றலாம் என்று நினைத்திருந்தேன்.மனப்பூர்வமாகவும், இதயசுத்தியுடனும் எமதுதேர்தல் விஞ்ஞாபனத்திற்குஅமைவாகஎனதுகடமைகளைநிறைவேற்றிமுடிக்கலாமென்றும் எதிர்பார்த்திருந்தேன்.சிறிதுகாலம் சென்றபின்பேஎனக்குஉண்மைநிலைவிளங்கியது. 

இந்தவிஞ்ஞாபனங்கள்,அறிக்கைகள் எல்லாம் தேர்தல் காலத்தில் எமதுமக்களைஏமாற்றுவதற்காகத்தயாரிக்கப்படுகின்றபோலிஆவணங்கள் என்றுதெரிந்துகொண்டேன். நாம் எந்தக் கட்சிசார்ந்துதேர்தலில் நின்றோமோஅந்தக் கட்சிகூடமக்கள் நலன்களில் அக்கறைகொள்ளாதுஅரசுக்குமுண்டுகொடுக்கின்றவேலையிலேயேகுறியாகநின்றார்கள். பலகேள்விகளைக் கேட்டுஅரசாங்கத்தைத் திணரவைக் கவேண்டிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் சுகபோக வாழ்க்கையிலேயே குறியாக இருந்தார்கள். எல்லாவிதமாகவும் பேசிப்பார்த்தேன். அந்தந்த நேரத்திற்கு ஏதோ சாட்டுப்போக்குகளைக் கூறி என்னை சமாதானப்படுத்தப் பார்த்தார்களேஅன்றிஅவர்கள் மக்கள் பக்கம் திரும்புவதாக இல்லை. ஈற்றில் எனதுமுடிவுகளைமாற்றிக்கொண்டுமக்களுக்காகஉழைக்கக் கூடியவர்களை இணைத்துக் கொண்டுதனிவழிசெல்லலாமென்றுசிலநடவடிக்கைகளில் இறங்கினேன்.பதவிக்காலம் முடிந்ததும் நான் கட்சியொன்றைத் தொடங்கினேன். 

எதற்காகஒருபுதியகட்சிஎன்றுபலர் எண்ணுவார்கள். புதியகட்சி ஒன்றை ஆரம்பித்து அதனூடாகதேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்;களுக்குக்கிடைக்கக் கூடிய ஆடம்பரபங்களாக்கள்,சொகுசுவாகனங்கள் என்று அவற்றைநாடித்தான் எமது பயணங்கள் தொடரப் போகின்றதா என்று கூட நீங்கள் நினைப்பீர்கள்.நிச்சயமாக இல்லை.என்னால் முடிந்தமட்டில் மிகுதியிருக்கும் வாழ்க்கைக்காலத்தை மக்கள் பணியில் ஈடுபடுத்தவே புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன்.
நான் நீதித்துறையில் நீண்டகாலம் பணிபுரிந்ததன் விளைவாகஎனதுவாழ்க்கையில் பெரும்பகுதிமக்களில் இருந்துஒதுங்கியஒருதனிமைவாழ்க்கையாகவேகழிந்துவிட்டது. உள்ளூரமனிதத்துவஉணர்வுகள் இருந்தபோதும் அதைவெளிக்கொண்டுவரஎனதுபதவிமுட்டுக்கட்டையாகஇருந்தது.தீர்ப்புக்களில் அவைபிரதிபலித்தன.ஆனால் மக்களோடுமக்களாக இணைந்துசெயற்படவாய்ப்புக் கிடைக்கவில்லை.
இப்போது அரசியலில் முழுநேரமாக இறங்கியபின்னர் எம்மக்கள்தான் எனது கரிசனையாக ஆகிவிட்டார்கள்.எனக்கு யாழ் குடாநாட்டில் காணியிருந்தும் எந்தவொரு வீடும் கிடையாது. நான் தற்போது வசிப்பதுவாடகைவீட்டில். நான் பயன்படுத்துகின்றவானகம் எனது பிள்ளைகளும் அன்பர்கள் சிலரும் இணைந்து வாடகைக்கு பெற்றுத்தந்த வாகனம். ஒன்பதுமாகாணமுதலமைச்சர்களில் எட்டுப் பேருக்குஅரசாங்கம் வாகனம் வாங்கபேர்மிட் வழங்கியது. எனக்கு மட்டும் இதுவரையில் தரவில்லை. நானும் பல்லிளித்துவந்துபக்குவமாகக் கேட்கவேண்டும் என்றுஅரசாங்கத்தினர் நினைக்கின்றார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் மிகவும் கஷ்ட நிலையில் இருந்துதான் கட்சியைக் கொண்டுநடத்துகின்றேன். 
மக்களின் ஊக்குவிப்பால் அரசியல் களத்தில் குதித்தாகிவிட்டது. இனி ஆடி முடிக்கவேண்டியது தான்பாக்கி.எமதுஅரசியலில் பாரிய குழப்பநிலைஒன்றுண்டு.அதிகாரங்கள் மேலிருந்துகீழாகபகிரப்படுகின்றது. இதனாலேயேஎமதுஆட்சியாளர்கள் மக்களின் குறைகளை,தேவைகளைஅறியாது இருந்துவருகின்றார்கள். ஆட்சியாளர்களுக்கும் அடிமட்டமக்களுக்கும் இடையில் இடைவெளிஅதிகமாகிவிட்டது. அதனால்த்தான்வீதியில் மக்கள் இறங்கிப் போராடுகின்றார்கள்,குரல் கொடுக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகள் பற்றிஎமதுதலைமைத்துவங்கள் ஆராயவேண்டும். ஆனால் மாறாகஎந்தமக்கள் எமக்குஅரசியல் ஆசனங்களைப் பெற்றுத் தந்தார்களோஅவர்களைஉதறித் தள்ளிவிட்டுஞாபகார்த்ததூபிகளுக்குமலர்மாலைஅணிவிப்பதுமட்டும் அரசியல் என்றுஆகிவிட்டது. 
தலைவர்கள் மரபுவழித் தலைவர்களாக இல்லாமல் மக்களால் உருவாக்கபடவேண்டும். அதற்குஅரசியல் உரிமைகள்,அதிகாரங்கள் என்பனஅடிமட்டத்திலிருந்துமேல் நோக்கிவளர்ச்சிபெறும்போதேஉண்மையானதலைவர்களை,மக்களுக்காகஉழைக்கக் கூடியதலைவர்களைப்பெற்றுக்கொள்ளமுடியும்.அந்தவகையிலேயேநாம் இப்போதுகிராமமட்டங்களில் இருந்துஎமதுகட்சிவேலைகளைஆரம்பித்துள்ளோம். 

அரசியல்த் தலைவர்கள் எனப்படுபவர்கள் யார்? மக்களால் அரசுக்குசெலுத்தப்பட்டவரிப்பணங்கள் அனைத்தும் மக்களுக்கேமுறையாகசெலவிடப்படுகின்றதாஎன்பதைகண்காணிப்பதற்கும்,மேலதிகபணத்தைவேண்டுமெனில் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும்,மக்களின்தேவைகளைத் தேடிக் கொடுப்பதுபற்றிஒழுங்குபடுத்துவதற்குமாகமக்களால் தெரிவுசெய்துபாராளுமன்றத்திற்குஅனுப்பப்படுபவர்களேஅவர்கள்.ஆனால் இன்றுஎன்னநடக்கின்றது? அந்தஐயாவீதிபுனரமைத்துத் தந்தார்; இந்தஐயாசந்தைக் கட்டடம் கட்டித் தந்தார்;மற்றஐயாமாதர் சங்கத்திற்கு இரண்டுதையல் மெசின் வாங்கித் தந்தார் என்றெல்லாம் மக்கள் பேசுவதைநான் கேட்டிருக்கின்றேன். ஆனால்அவற்றைஎல்லாம் அவர்கள் தமதுசொந்தப் பணத்தில் கொடுக்கவில்லை. இந்தறோட்டுஎனதுசொந்தப் பணத்தில் போடப்பட்டதுஅல்லது இந்ததையல் மெசினுக்கானகட்டணம் எம்மால் செலுத்தப்பட்டதுஎன்று கூறக்கூடியஅரசியல் தலைவர்கள் யாராவதுஇருக்கின்றார்களா?மிகமிகஅரிது.அரசஒதுக்கீடுகளில் இருந்துஉத்தியோகபூர்வமாகமேற்கொள்ளப்படவேண்டியதிட்டங்களைதமதுசொந்தப் பணத்தில் நடைமுறைப்படுத்துவதுபோன்றுஒருமாயாஜாலவித்தைகாட்டிவருகின்றார்கள். இந்தநிலைமாறவேண்டும். எந்தஒருஅரசியல்வாதியும் தனதுசொந்தப்பணத்தில் மக்களுக்குநன்மைபெற்றுத் தந்துள்ளார்களாஎன்பதைநீங்கள் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்.அரசாங்கம் தரும்பணத்தைதம் சொந்தப் பணம் போல்க் காட்டிஎவ்வாறுஅவர்கள் அரசியல் இலாபம் பெறமுயற்சிக்கின்றார்கள் என்பதைநீங்கள் உணரவேண்டும்.
இனிவரும் காலங்களிலாவதுமுறையானதன்னலமற்றமக்கள் தொண்டர்களாகஉழைக்கக் கூடியதலைவர்களைஉருவாக்கநீங்கள் முன்வரவேண்டும். அதற்காககிராமமட்டங்களில் குழுக்களைஅமைத்துஒவ்வொருவட்டாரக் குழுவும்தனக்குள் ஒருதலைவரைத்தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் வட்டாரக் குழுக்கள் இணைந்துதொகுதிக்கானதலைவர்களைஉருவாக்கவேண்டும். பின்னர் தொகுதித்தலைவர்கள் அனைவரும் இணைந்துகொண்டுதமதுமாவட்டத்திற்கானபிரதிநிதியைதேர்வுசெய்யவேண்டும். இவ்வாறுசெய்வதால் அடிமட்டமக்களும் மேலுயர்ந்துஅதிகாரம் செலுத்தவாய்ப்பளிக்கும். 
முன்னையகாலங்களைப் போலல்லாதுதற்போது இளைஞர்,யுவதிகள் அரசியலில் அதிகஆர்வம் காட்டுவதுமகிழ்ச்சியைத் தருகின்றது. இளைய இரத்தங்கள் துடிப்புடனும்,முனைப்புடனும் செயலாற்றக் கூடியன. ஆனால் இவர்களும் வளர்ச்சிஅடைகின்றபோதுமாற்றம் பெறஎத்தனித்தால் எமதுமக்களைக் காப்பாற்றஆண்டவனைத் தவிரவேறுஎவருமில்லைஎன்றேகூற வேண்டிவரும்.எனவேநீங்கள் முறையானதலைவர்களைஉருவாக்குவீர்கள் என்றுநம்புகின்றேன்.நாம் பின்னணியில் நின்றுஅவர்களுக்குவழிகாட்டிகளாக இருந்துசெயற்படுவோம்.
இன்றையதினம் வடமராட்சிவடக்குபிரதேசசபைக்குஉட்பட்ட 8ம் வட்டாரத்திற்கானவட்டாரக் குழுவைதேர்ந்தெடுப்தற்கானமுயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டிருப்பதாகஅறிகின்றேன்.அந்தத் தெரிவுகளைமேற்கொள்வதற்குவசதியாகஎனதுஉரையை இந்தஅளவில்நிறைவுசெய்துவிடைபெறுவதற்குமுன்பாகஒரேயொருவிடயத்தைமட்டும் கூறிச் செல்லவிரும்புகின்றேன். மணற்காடுதொடக்கம் நாகர்கோவில் வரையிலானபகுதிகளில் வாழுகின்றமக்களுக்குஒருமனக்குறை இருப்பதைநான் உணர்கின்றேன்.

அதாவது உங்கள் பகுதி நிலங்கள் மணற்பாங்கானது. எந்தவித விவசாய முயற்சிகளுக்கும் உதவாத நிலம்; என்ற ஒரு எண்ணப்பாடு இங்கு இருக்கின்றது. எந்த நிலம் குறைபாடனது என நீங்கள் கருதிவந்தீர்களோ அதே நிலம் இன்னும் 10,20 வருடங்களில் பொன் கொழிக்கும் பூமியாகமாற்றம் பெறும்.ஏனெனில் உங்கள் பகுதிகளில் நிரம்பியிருக்கின்றமண் ஒருவகைசிலிக்கோன் கலவைசார்ந்தது. கண்ணாடிகளைஉருவாக்குவதற்கும்கணணிதொழிற்துறையில் பாவிப்பதற்கும் இந்த மணல் மிகப் பயனுள்ளதாகஅமைவனஎன்று கூறப்படுகின்றது.எனவேஉங்கள் நிலத்தில் தென்பகுதிமுதலாளிவர்க்கங்கள் அபிவிருத்திஎன்றபோர்வையில் இந்தமணலைகபளீகரம் செய்யஎத்தனித்தால்அதனைநீங்கள் முன்னின்றுதடுத்துநிறுத்தவேண்டும். அதேபோன்றுஎமதுஉள்ளூர் மணற் கொள்ளைக்காரர்கள் பாரியபணம் ஈட்டுவதற்காக இந்தமணலைகொள்ளையிடஎத்தனிப்பார்கள். அதையுந் தடுத்துநிறுத்தவேண்டும்.இவற்றில் எல்லாம் நீங்கள் அவதானமாகசெயற்படவேண்டும் என அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments