பேருந்தின் கதவுகள் மூடப்பட்ட பயணிகள் மீது சோதனைக் கெடுபிடி!

வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பயணிகள் மீது சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.

இன்று வாரிக்குட்டியார் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சோதனைக் சாவடியில் இருந்த காவல்துறையினர் வந்து பேருந்தின் இரு கதவுகளையும் மூடினர். 

பின்னர் ஒவ்வொரு பயணியாக சோதனைச் சாவடிக்கு வரவழைத்து துருவித் துருவி பயணிப் பொதிகளை சோதனையிட்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக இங்கே காவல்துறையினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினர் அங்கு குந்தியிருந்து சோதனை நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கே நினைவூட்டத்தங்கது.
No comments