பாணிலும் கை வைத்தது நல்லாட்சி!


இலங்கையில்  ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம்  நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

கோதுமை மாவின் விலை 8 ரூபாயாக அதிகரித்துள்ளமையினையடுத்தே பாணின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் ஒரு இறாத்தல் பாணின் தற்போதைய விலை இலங்கையில் 70 ரூபாய் ஆகும்.

No comments