தமிழினத்தை கருவறுத்த கறுப்பு யூலை - ஞா.ரேணுகாசன்

இது சிங்கள அரசு திட்டமிட்டே தீட்டிய தமிழினப் படுகொலையின் உச்சம்
இது தமிழரின் பொருளாதாரத்தை அடியோடு நசுக்க சிங்களம் ஆடிய பலியிடல்

தமிழீழ இராணுவம் கொண்ட எழுச்சியில் பயந்த சிங்கள தேசம்
தமிழரை அடக்க சிங்களம் ஏந்திய கையாலாத கீழ்த்தரமான செயலே

ஒற்றுமையாய் வாழ்ந்த மனிதகுலத்தில் வேற்றுமையை தூவின ஜேஆரின் கரம்
ஒன்றாக குதுகலித்த இனத்திடையே தீயை கொழுத்தி வேடிக்கை பார்த்தார்

தீயின் நாக்கில் கொழுந்து விட்டெரிந்தது தமிழரின் பொருளாதாரம்
தீயில் கருகியது தமிழரின் உரிமை மட்டுமல்ல பௌத்த மத தர்ம போதனையும் தான்

சுற்றம் சூழ வாழ்ந்த சிங்கள சகோதரனும் துரோகி ஆனான்
பார்த்து பார்த்து பழகிய நட்புக்களும் கைகளில் அரிவாள் கொண்டு அறுத்தன

நிர்க்கதியற்ற நிலையில் பாதி எரிந்து மீதி தொலைந்து
நீதியற்ற தேசத்தில் பாவிகளாய் பரதேசிகளாய் பரிதவித்தனர் தமிழர்கள்

மனதை உலுக்கிய படுகொலைகள் எண்ணிலடங்காதவை
மரணவலி தந்த வன்முறைகள் மனிதகுலம் செய்திட மறுத்த வலிகளை தந்தது சிங்களம்

கடைகள் வீடுகள் தமிழர்களின் உடல்கள் என்பன தீயில் சாம்பலாயின
காடையரின் ஆழ்மனதில் வேரூற்றிய கொடூர எண்ணங்கள் தீயாக வெளித்தோன்றின

தமிழர் வாழ்பகுதி எங்கும் மரணவோலம் வானை முட்டிட
தமிழரின் குருதி கொழும்பில் பெருகி ஓட ரசித்தன சிங்கள அரசு

இரத்தவெறி அடங்காத பௌத்ததேச காட்டுமிரண்டிகள்
இரத்தம் உறையும் காரியங்கள் பலவற்றை முன்னின்று செய்தனர்

வெலிக்கடை சிறைச்சாலை அரசியியல் கைதிகள் மீதும்
வெறிகொண்டு தாக்கினர் தம் இனவெறி தீரும் வரை விதம் விதமாய் வேட்டையாடினர்

சிறையின் மத்தியில் அமர்ந்திருந்த புத்தருக்கு தமிழரின் இரத்தத்தால் அபிசேகம்
தமிழரின் கண்களை பிடுங்கி புத்தருக்கு பார்வையும் கொடுத்தனர்

மரணபயம் தந்தால் தமிழன் பயந்திடுவான் என்றே சிங்களம் நினைத்தது
மரணவலியோ எமக்கு பெரும்படை நடத்த துணைநின்றது

மொத்தமாய் அழித்து சொத்தெல்லாம் பறித்து தமிழரை நாடுகடத்தினர்
தமிழீழ தேசத்திற்கான அடிக்கல்லையும் அவர்களே நட்டனர்

இந்தவலியை நாம் ஒருபோதும் மறந்திட மாட்டோம்
அந்த வலி தந்தவனை நாம் ஒருபோதும் மன்னிக்கவும் மாட்டோம்

நீ எம்மில் ஒருவருக்கு எதிர்க்கட்சி பதவியை தந்து உன்னை புனிதனாக்கலாம்
அப்பதவி அந்த மாங்கா மடையனோடு மட்டும் நீர்த்து போகட்டும்

நீ எம்மில் ஒருவரை சனாதிபதி சட்டத் தரணியாக உன்னருகில் நிறுத்தலாம்
அந்த பதவியும் அந்த விளங்காத கேவலங்கெட்டவனோடு போகட்டும்

காலம் செல்லச் செல்ல நீ தந்த வலி குறையும் என்றெண்ணி விடாதே
வலியது மேவி உளமது வெந்து தணலாய் காத்திருக்கு எரித்திட

நீறு பூத்த நெருப்பாய் நெஞ்சக கூட்டில் அக்கினி வலி சிறையிருக்கு
சாகும் வரை மறவோம் சிங்களத்தை காவு கொள்ளாது ஓயோம்

கறுப்பு யூலை எங்களின் ஆழ்மனதை வருத்திடும் துன்பியல்
கலங்கி நிற்கிறோம் வலிய கரம் எம்மை வழிநடத்தும் என்றெண்ணி

கட்டிக்காத்த அத்தனை அற்புதங்களையும் இழந்தும் மீண்டும் எழுவோம்
கலங்கரையாய் தமிழன் வீரம் இருக்கும் வரை இவ்வுலகில் தனித்துவமாய் நிலைப்போம்

ஆண்டுகள் பல கடந்து விட்டன ஆறாத வலியோ ஆறாகி பெருகிடுதே
மாண்டு விட்ட மனிதநேய ஆன்மாக்களை நினைந்து அஞ்சலிக்கிறேன்

No comments