கறுப்பு யூலைப் படுகொலை - ஞா.ரேணுகாசன்
ஈழ தமிழ் மக்கள் இனப்படுகொலையின் உச்சத்தை சிங்கள தீவிரவாதிகள் உலகறிய செய்திட்ட நாள்.
தமிழ் மக்களுடன் வீரத்துடன் போரிட வக்கற்ற சிங்கள அரசு, தனது இயலாமையையும், கையாலாகாத தனத்தையும் அப்பாவித்தமிழரின் மீது கோழைத்தனமாக காட்டி இரத்த ஆற்றில் பௌத்த மத தீவிரவாதிகள் காவி உடுத்திய நாள்.
தமிழரின் கடின உழைப்பால் உயர்ந்த பொருளாதார மேம்பாட்டை உடைப்தற்காக திட்டம் தீட்டி, சிறுக சிறுக சேர்த்த செல்வங்கள், சொத்துக்கள் என்பனவற்றை கொள்ளையிட்டும், தீயிட்டும் நாசப்படுத்தியது சிங்களம்.
பல்லாயிரக்கணக்கான மக்களை வெட்டியும், குத்தியும், தீயிலிட்டும் , இயந்திர துப்பாக்கியால் தாக்கியும், அடித்தும் கொன்று குவித்தது சிங்கள பௌத்த பேரினவாத அரசு.
உயிரை மட்டும் கையில் பிடித்து தமிழர் தாயகப்பகுதியை நோக்கியபடி எம்மக்கள் அகதிகளாக்கப்பட்ட பெரும் வலி சுமந்த துயரம் அரங்கேறியது. அத்தோடு ஈழ மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வெலிக்கடை சிறையில் வதைக்கப்பட்ட எம் உறவுகளையும் சிங்களம் இனச்சங்காரம் செய்தது.
இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத துன்ப வலியை அன்றைய சர்வதேச சமூகம் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஆதலால் தொடர் கொலைகளாக 1986 , 1990 , 2009 என ஈழத்தமிழின உறவுகள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டனர். இதுவரைக்கும் எமக்கான நீதி மறுக்கப்பட்ட வண்ணமயமுள்ளது.
அன்றைய பாரத பிரதமர் இந்திராக்காந்தி அவர்களால் இனியும் ஈழத்தமிழர் வதைக்கப்பட்டு கொலைசெய்ய்ப்படுவதை அனுமதிக்க முடியாதென இலங்கை அரசை எச்சரித்தார். ஆனால் அதன் பின் பதவியேற்ற இந்திய பிரதமர்கள் ஈழத்தமிழரை அழிக்கவும் சிங்களத்தை ஆதரிக்கும் கொள்கை வகுப்போடு முள்ளிவாய்க்கால் வரை இத்தாலி அரக்கியால் ஈழத்தமிழர் படுகொலை தொடர்ந்தது.
எமைக் காக்க பலமாக பல்வேறுபட்ட கோணங்களில் போராடியும் , எம்மையும் எமது உரிமை போராட்டத்தையும் எந்த ஓர் நாடும் அங்கரிக்காது, இருபதுக்கு மேற்பட்ட நாடுகளால் அழிக்கப்பட்டோம்.
எமது அழிவு சர்வதேச நாடுகளின் திட்டவரைபிலேதான் அரங்கேற்றப்படுகிறது. என்பதை இந்நாளில் உணர்ந்துகொள்ளுவோம்.
நமக்கான அரசியியல் வாழ்வுரிமை தொடர்ந்தும் நாம் தேர்ந்தெடுத்த தமிழ் அரசியியல்வாதிகளால் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை புரிந்து செயற்படுவோம்.
1977 இல் தனித்தமிழீழத்திற்கான வாக்கெடுப்பில் வெற்றிபெற்று எதிர்கட்சி பதவியிலமர்ந்த போதும் சரி,
1983 இனப்படுகொலையின் பின்னரும் சரி,
1990 களில் சிங்களம் மேற்கொண்ட தமிழின படுகொலையின் போதும் சரி,
2009 களின் போது இந்திய இலங்கை அஅரசால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலை இனவழிப்பின் பின்பும் சரி
எமக்கான அரசியியல் படு பாதாளத்தில் தான் வீசப்பட்டது.
நாம் தேர்ந்தெடுத்த அரசியியல்வாதிகள் தமிழின அழிப்பு தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை நமக்கான நீதியை, தீர்வை பெற்றுத்தர முன்வரவில்லை.
எம்மக்களின் வாக்கைப்பெற்று பல நாடுகளில் சுகபோக உல்லாச சுற்றுலா மேற்கொள்பவர்கள் இதுவரை காலமும் ஒருமுறையாவது
* ஈழத்தில் நடந்தேறியது , நடக்கப்போவது தமிழினப்படுகொலை என இதயசுத்தியுடன் எங்கும் முறையிடவோ? அல்லது சர்வதேச நீதி விசாரணை கேட்டோ முறையிடவில்லை.
* தமிழின உரிமைக்காக போராடிய விடுதலை இயக்களின், தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையும் எமது அரசியியற் கட்சியின் கொள்கையும் ஒன்றுதான் என இதுவரையில் எந்த ஓர் அறிக்கையோ , அறிவித்தலோ வெளியிடவில்லை.
எனவே எம்மக்களின் இரத்த சகதியிலும், வீரமறவர்களின் வீரத்திலும், விழுப்புண்ணிலும் , இழந்த உறவுகளை நினைந்துருகும் கண்ணீரிலும் இரு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அலங்கரிக்கின்றனர்.
இவர்கள் எமக்கான அரசியியலை முன்னெடுப்பதற்கான தகுதியை இழந்தவர்கள். எமக்கான அரசியியலை இளைய சமூதாயம் பொறுப்பேற்காவிட்டால் தொடரும் இனவழிப்பை யார் தடுப்பார்.
இந்நாளில் மிகப்பயங்கரமான முறையில் எம்முறவுகளை படுகொலை செய்த சிங்கள தீவிர பயங்கரவாதிகளை கண்டித்தும்,
இந்நாளில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் பரிசுத்த ஆன்மாக்களின் சாந்திக்காக மனம் ஒருமித்த பிரார்த்தனையை முன்னெடுத்து, தமிழனாய் வாழ தலைநிமிர்வோம்.
ஞா. ரேணுகாசன்

Post a Comment