கமல் அரசியலில் கலந்தார் ரகுமான்!

நடிகர் மல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்ட நிலையில் தற்போது அரசியல் சார்ந்த திரைப்படம்  'தலைவன் இருக்கின்றான்'  என்ற பெயரில்  இயக்க முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர்  இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் அவர்களுடன் ஆலோசனை செய்யும் புகைப்படத்தை தனது கீச்சு பக்கத்தில் கமல்ஹாசன்பதிவு செய்துள்ளார், ஒரு சில படங்கள் தயாரிக்கும் போது மட்டும் மிகுந்த திருப்திகரமாக இருக்கும் என்றும் அப்படி ஒரு படம் தான் இந்த 'தலைவன் இருக்கின்றான்' படம் என்றும் அவர் அதில்  தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பொருட்செலவில்  உருவாகும் இந்த அரசியல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது, இந்த அரசியல் பட அறிவிப்பு அவரது ரசிகர்களை அதாவது மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இந்த படம் கமலஹாசன் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்று விமர்சகர்கள் கூறின்றனர்.

No comments