மதவாச்சி விபத்தில் மூவர் பலி:ஜவர் காயம்!


அநுராதபுரம்- மதவாச்சி வீதியின் வஹமலுகொல்லேவ பிரதேசத்தில்  இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தேசத்திலிருந்து நாடு திரும்பிக்கொண்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸொன்றும் தம்புள்ளை நோக்கி பயணித்த லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதால், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டினைச் சேர்ந்த 53, 30, 12 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக, அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனரென்றும்,  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments