ஜனாதிபதித் தேர்தலில் ஐதேக துண்டு துண்டாக உடையும்

“நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியக் தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும். இது உறுதி.”

– இவ்வாறு தெரிவித்தார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எவ்விதத்திலும் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள். எந்தவொரு வேட்பாளர் களமிறங்கினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அது சவாலாக இருக்காது.

இதேவேளை, ஜனாதிபாதித் தேர்தலில் ஐக்கியக் தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும். இது உறுதி. ஏனெனில், அந்தக் கட்சிக்குள் மூவர் வேட்பாளர்களாகக் களமிறங்க ஆசைப்படுகின்றார்கள். இதனால் இப்போதே அந்தக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன” – என்றார்.

No comments