புலம்பெயர் உறவுகளது கரிசனை முக்கியமானது:விக்கினேஸ்வரன்!


போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள் எங்கள் புலம்பெயர்ந்தமக்களின் கரிசனைக்குள் வந்துள்ளார்கள் என்பது போற்றப்படவேண்டும். அவர்கள் எமக்காகப் போராடியவர்கள். போரில் கலந்து அங்கவீனர்கள் ஆகிவிட்டார்கள். பாதிக்கப்படாத நாங்கள் அவர்களுக்கு எம்மால் ஆன உதவிகளைச் செய்வதே எமது கடமையாகுமென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

சிறியதோ பெரியதோ ஈகைகளைப் பெறுபவர்கள் தம்மைச் சுற்றியுள்ள சமூகம் அவர்கள் மீது கரிசனை கொண்டுள்ளார்கள் என்பதை அறியவேண்டும். பணம் கொடுப்பவர்கள் உரியவாறு உரியவர்களுக்குத் தமதுப ணம் சென்றடைந்துள்ளன என்பதில் திருப்தி அடையவேண்டும்.

புலம்பெயர் உறவினர்களின் உதவிகள் ஒரு முன்னுதாரணமாக விளங்கநாம் எம்மால் ஆன மட்டும் நேர்மையாக அவர்களின் உதவிகளை தேவையுடையவர்களுக்கு வழங்கவேண்டுமெனவும் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


No comments