சிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு?
ரணில் வெறுமனே வந்துசென்ற நிகழ்ச்சியான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு நோயாளர்களது மருத்துவ தேவைக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதி செலவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
கடந்த பெப்ரவரி 15ம் திகதியன்று இடம்பெற்ற இந்த விழாவுக்கான செலவுக்கு நோயாளர் நலன்புரி சங்கத்தின் நிதியிலிருந்து ஒரு இலட்சத்திற்கு மேல் முற்பணமாக பெறப்பட்டு செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அது இன்னமும் மீள செலுத்தப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு நிதியே ஒதுக்கப்படாத ஒரு நாடகமென்பது அண்மையில் அம்பலமாகியிருந்தது.
இதனையடுத்து சுகாதார அமைச்சருடன் சிறீதரன் நேரடியாக போராடி திட்டத்திற்கு நிதி ஏற்பாடு செய்வதாக உறுதி மொழியை பெற்றதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே இந்நிகழ்விலேயே சிறீதரனிற்கு தலைப்பாகை கட்டி ரணில் சுமந்திரன் ஆகியோர் அவரை கோமாளியாக்கியிருந்தது தெரிந்ததே.
Post a Comment