போறவர்கள் போகட்டும்; அசராத சசிகலா.

கடந்த மக்களவைத் தேர்தலில் தினகரனின் அமமுக படுதோல்வியடைந்ததை அடுத்து அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள விலகி மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தினகரன், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் கலந்துரையாடியுள்ளார். 

பின்னர் ஊடகவியலாளர் நிர்வாகிகள் விலகல் தொடர்பில் சசிகலாவின் கருத்து குறித்து கேள்விக்கு  தினகரன் பதிலளித்தபோது , “ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேல் இருந்த சசிகலா அவருடைய பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்தவர். அதனால் நிர்வாகிகள் விலகலை பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறினார் என்றார்,

மேலும தேர்தல் தோல்விக்குப் பின்னர்தான் விலகுகிறார்கள். அதற்காக வேறு வேறு காரணங்களை கூறுகிறார்கள். போகிறவர்கள் போகட்டும் என நான் அகங்காரமாக சொல்கிறேன் என சிலர் சொல்கிறார்கள். ஆனால் ஒரு நிர்வாகி வெளியேற முடிவெடுத்துவிட்டால் அதனை தடுத்து நிறுத்த முடியுமா? தடுப்பதுதான் நியாயமாக இருக்குமா? அரசியலில் ஒரு இயக்கத்தில் சுயவிருப்பத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

No comments