கூட்டணி தலைமையில் மாற்று அணி!


தேர்தல்களில் வெற்றி பெறுவதை மட்டும் இலக்காக கொண்டு கட்சியை நாம் நடத்தமுடியாது.  தேர்தல் அரசியலுக்கு அப்பால் பல வேலைத்திட்டங்களை அரசியல் கட்சி என்ற வகையில் நாம் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. அதேவேளை, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அது குறித்தும் நாம் ஆயத்தங்களை மேற்கொள்ளவேண்டுமென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு கூட்டத்திலேயே சி.வி.விக்கினேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் ஒரு மாற்று அணி ஒன்றை ஏற்படுத்தும் வகையில் பரந்த கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து ஊடகங்களில் நிறையவே வலியுறுத்தப்பட்டுள்ளது. கட்சிகளின் தலைவர்களும், பல புத்திஜீவிகளும் என்னுடன்  கதைத்துள்ளனர். இது தொடர்பில் உடனடியாக எந்த முடிவுகளையும் நாம் எடுத்து விட முடியாது. நன்கு ஆராய்ந்து நிதானமான முறையில் நாம் செயற்படவேண்டி இருக்கிறதெனவம் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடையே கூடிய கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெற நாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கிழக்கின் நிலையை  முற்றாக வடக்கு மக்கள் உணர்ந்து செயற்படும் நிலை விரைவில் மலர வேண்டும்.

கிழக்கு மாகாணப் பிரச்சினைகள் வடக்கில் இருந்து வேறுபட்டவை என்பதை நாம் உணர்ந்துள்ளோமெனவும் அவர்  தெரிவித்துள்ளார். 

No comments