இந்திய கனவு மெய்யாகின்றது?


இந்திய அரசின் கனவுகளில் ஒன்றான பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அமைச்சர்கள் மற்றும் கூட்டமைப்பினருடன் யாழிலுள்ள இந்திய துணைதூதரக அதிகாரி பாலச்சந்திரனின் பிரசன்னத்தில் விஸ்தரிப்பு பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் ஓகஸ்ட் முதலாவது விமான சேவையினை சென்னைக்கு ஆரம்பிக்கும் வகையில் திருத்த வேலைகள் மும்முரமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற வேண்டும். அவர்களின் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்பட பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆராய வேண்டுமென கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

பலாலி விமானநிலையம் பலாலியில் தேவையில்லையென அவர் கருத்து வெளியிட்டு வந்திருந்த போதும் கூட்டமைப்பு அது தொடர்பில் வாயn திறக்காதுள்ளது.

இது தொடர்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாகவே யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் துரைராஜா அவர்களால் முன்மொழிவு செய்யப்பட்டது.குறிப்பாக பலாலி விமானநிலையத்தை பூநகரியில் உள்ள கௌதாரிமுனை வினாசிஓடை, மண்ணித்தலை போன்ற பரந்த நிலப்பரப்பில் அமைக்கமுடியும்.

இத்தகைய இடங்களில் விமானநிலையம் அமைக்கும் போது வடக்கு கிழக்கிற்கான மத்திய நிலையமாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குருநாகலில் இருந்து மண்ணித்தலைக்கு 300 மீற்றர் வரை பாலம் அமைப்பதன் ஊடாகவும் ஏற்கனவே கேரதீவு சங்குப்பிட்டி பாதை இருக்கிறது.

இதன்மூலம் மன்னாரில் இருந்து வருபவர்களுக்கு மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து வருபவர்களுக்கு முல்லைதீவின் ஊடாக வருவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக முன்னாள் பேராசிரியர் துரைராஜா மண் தொடர்பான ஆய்வை மேற்கொண்டே இந்த ஆய்வை முன்வைத்தார்.

அந்த எண்ணக்கருவின் படி பலாலி விமானநிலைய பிரதேசம் செம்மண் பிரதேசமாகும். இது யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தினுடைய முக்கியமான முதுகெலும்பாகும்.

குறிப்பாக மரக்கறி செய்கை, முந்திரிகை, வெற்றிலை செய்கைகளுக்கு உகந்த இடம். இங்கு மண், நீர் வளமான பிரதேசமாகும். இத்தகைய பிரதேசத்தை விமானநிலைய விஸ்தரிப்பு எனக்கூறி அரசு சுவீகரிக்குமானால் யாழ். மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இல்லாமலே போய்விடும் சூழல் ஏற்படும்.

அதற்காகவே பூநகரி அடையாளம் காணப்பட்டது. இது கூட நெருக்கடி ஏற்படுமானால் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள சுருவில் பகுதி பரந்த பகுதியாகவும் தட்டையானதும் கல்பூமியாகவும் காணப்படுகிறது.

இந்த இடத்திலும் விமானநிலையத்தை அமைப்பது சாலப்பொருத்தமாகும் என்ற விடயமும் அன்று ஆராயப்பட்டது. அதந்கான காரணம் அராலித்துறை பாலம் அமைக்கும்போது 15 நிமிடத்திலும் செல்லமுடியும்.

அதேபோல் பண்ணைப்பாலத்திந்கும் செல்ல முடியும். அதேபோல் மண்டைதீவிற்கும் கௌதாரிமுனைக்கும் ஏற்படுத்தும் பாதைகூட மிக விரைவாக தீவுப்பகுதிக்கு செல்ல முடியும்.
இவ்வாறு ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் விமானநிலையம் அமையும் போது தீவகம் முழுமையாக அபிவிருத்தி அடையும். அங்கு மீள்குடியேற்றம், விவசாயம் அதிகரிக்கும்.
மண்டைதீவிலும் அமைக்கலாம். ஆனால் போதிய இடம் அங்கு இல்லை. எனினும் பூநகரி, சுருவில் பகுதிகளில் விமானநிலையம் அமைப்பது காலத்தின் தேவையாக இருக்குமென அவதானிகள் தெரிவிக்கின்றனர். 

No comments