கடற்படைக் களஞ்சியத்திலிருந்து தீவிரவாதிகளுக்குச் சென்ற ஆயுதங்கள்

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுதப்பட்ட வெடிபொருட்கள் வெலிசறை கடற்படைமுகாம் களஞ்சியத்திலிருந்து விநியோகிக்கப்பட்டவையா? என்பது தொடா்பில் பாதுகாப்பு தரப்பினா் விாிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை பகிரங்கப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கர்வாதிகளுடன் தொடர்புடையோர்

என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்களில், வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments