அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடா்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்றை இரு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமா்ப்பிக்கவுள்ளேன். என அமைச்சா் மனோகணேசன் கூறியுள்ளாா்.

இன்று காலை மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிா்ப்பு போராட்டத்தை நடாத்திவந்த தேவதாசனின் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து வைத்த அமைச்சா் பின்னா் தனது பேஸ்புக் பக்கத்தில் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளாா்.

அதில் மேலும் அவா் கூறியுள்ளதாவது, தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றை, இன்னும் இரு வாரங்களுக்குள், அமைச்சரவையில் நான் சமர்பிக்க உள்ளேன்.

எனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு, நான் தந்த ஒரு கிண்ணம் நீரை அருந்தி, தேவதாசன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட சம்மதித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக, சமர்பிக்கப்பட உள்ள, இத்தகைய ஒரு அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள செய்ய அனைத்தையும் நான் செய்வேன்.

இதற்கு தேவையான அரசியல் சூழல் நாட்டிலும், அரசுக்கு உள்ளேயும், வெளியேயும் ஏற்படும் விதத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டுமென

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகிறேன்.

No comments