வெளிநாட்டமைச்சரின் கடிதத்தால் சர்ச்சை

வெளிநாட்டமைச்சின் பதில் செயலாளர் ஜவாத் நீதிபதிமாருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது.
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் நிபுணர்களை இன்று சந்தித்து சில வழக்குகள் குறித்து விபரங்களை கொடுக்குமாறு வெளிநாட்டமைச்சின் பதில் செயலாளர் ஏ.ஜவாத் நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினேஷ் குணவர்தன எம் பி சபையில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.
இப்படியான நீதிபதிகள் மீதான அழுத்தங்கள் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்போது பேசிய விமல் வீரவன்ச எம்பி , நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பி நீதித்துறையில் தலையிட்ட செயலாளர் ஜவாத்தை பாராளுமன்றம் அழைத்து சபாநாயகர் கண்டிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் உறுதியளித்தார்.

No comments