தற்கொலை குண்டு தாக்குதலுக்கு கடற்படையினர் வெடிகுண்டு விநியோகம்!


சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையோர் எனும் சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில் வெலிசறை முகாமூடாக சட்டரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்களிருந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று(23) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பாக விசாரணைகளை நடாத்துவதால் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் மூன்று கத்தோலிக்கத் தேவாலயங்கள், மூன்று நட்சத்திரக் ஹோட்டல்கள் உட்பட எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் வெலிசறை கடற்படை முகாமின் கீழுள்ள வெடிபொருள் களஞ்சியத்திலிருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா? எனப் பாதுகாப்புத் தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

No comments