30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் - மக்களை கைவிட்ட சட்ட உதவி ஆணைக்குழுமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகிய இரண்டு திணைக்களத்திடமும் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் நிலவிடுவிப்புத் தொடர்பில் இடம்பெற்ற சட்ட உதவி ஆணைக்குழுவும் எமக்கு உதவவில்லை என மாவட்ட மீனவ அமைப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதார நிலங்களை வனவளத் திணைக்களம் ,வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் 7ம் திகதி ஓர் விசேட ஆய்வு இடம்பெற்றது.

இதில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1983 ஆம் ஆண்டுமுதல் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது அப்பகுதியில் வளர்ந்த மரங்களின் அடிப்படையில் அப்பகுதி தமக்குரியது என வனவளத் திணைக்களம் உரிமை கோருகின்றது. இதனால் இதேபோன்று மேலும் பல இடங்களை வன ஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோரியுள்ளது.

மாவட்டச் செயலகத்தின் கணக்கின் பிரகாரம் இவ்வாறு இரு திணைக்களமும் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமித்துள்ள நிலையில் பல குடும்பங்கள் தமக்கான வாழ்விடத்தை அமைக்க முடியாது தவிப்பதோடு மேலும் பல ஆயிரம் குடும்பங்கள் தமது வாழ்வாதார நெருக்கடியினையும் சந்திக்கின்றனர். இதன் காரணமாக சட்ட உதவி ஆணைக்குழுவின் இணைப்பாளரான ஓய்வு பெற்ற அரச அதிபர் பந்மநாதன் தலமையில் அன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஓர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் , வன வளத் திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களம் , கம நல சேவைத் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் , பணிப்பாளர்களும் கலந்துகொண்ட நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வசம் 12 ஆயிரத்து 500 ஏக்கர் நிலமும் வனவளத் திணைக்களத்திடம் 17 ஆயிரத்து 500 ஏக்கரைத் தாண்டிய மக்களின் நிலங்கள் உள்ளன. இதில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினில் மட்டும் வனவளத் திணைக்களத்திடம் 13 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.

இவ்வாறு வனவளத் திணைக்களத்தின் பிடியில் உள்ள நிலத்மில் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்வாதாரத்மிற்காகவும் வனஜீவராசிகன் திணைக்களத்மின் பிடியில் உள்ள நிலத்தில் 3 ஆயிரத்மு 200 ஏக்கர் நிலம் இறால் வளர்ப்புத் திட்டத்திற்காக நீரியல்வளத் மிணைக்களம் ஊடாக கோரிக்கை விடுத்தார் அவை இன்றுவரையில் விடுவிக்கப்படவே இல்லை. எனச் சுட டிக்காட்டப்பட்டபோது பணிப்பாளர் நாயகம் சமூகமளிக்காதமையினால் உடன் முடிவு எட்டப்பட முடியவில்லை. கொழும்பு சென்று ஒரு கிழமையில் பதிலளிப்பதாக தெரிவித்தனர்.

இவ்வாறு தெரிவித்துச் சென்று இன்று 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் எமக்கு எந்த திணைக்களமும் தீர்வைப் பெற்றுத் தரவில்லை. மாவட்டத்திற்கு வந்து எமது நேரத்தையும் காலத்தையும் வீண்டிக்கெம் அமைப்புக்களாகவே அனைவரும் செயற்படுகின்றனரோ என்ற சந்தேகமே எழுகின்றது. என்கின்றனர்.-

No comments