ஜெர்மனியில் வெடிகுண்டு சோதனை சுற்றிவளைப்பில் 6பேர் கைது!

ஜெர்மனியின் முக்கிய நகரங்களான Düren மற்றும் Cologne ஆகிய இடங்களில்  இஸ்லாமியர்கள் குடியிருப்பு பகுதியில் நடந்த சுற்றிவளைப்பு  சோதனைகளில் ஆறு பேர் கைதுசெய்யப் பட்டுள்ளனர்  என்று ஜேர்மனிய செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.

மோப்ப நாய்கள்  மற்றும் வெடிமருந்து நிபுணர்களின் உதவியோடு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று  காவல்துறையினர் உறுதி செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேர்  பேர்லினில் உள்ள சலாபிஸ்ட் மற்றும் ஜியாடி குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.


No comments