பொங்கி எழுகின்றன இந்து அமைப்புக்கள்?


திருகோணமலை-கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு பௌர்ணமி   தினமான நேற்று  வழிபடச்  சென்ற பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டமை மற்றும் தென்கயிலை ஆதீனம் தாக்கப்பட்டமை தொடர்பில் இந்து அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு தவத்திரு அடிகளார்  தலைமையில் பக்தர்கள் வழிபடச் சென்றபோது, ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளதாக  கூறி,  அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு பத்திரத்தை பொலிஸார்  கையளித்திருந்தனர்..

இதனையடுத்து, அப்பகுதியிலுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன்,  அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதன்போது, கன்னியா பிள்ளையார் கோவிலுக்கு சென்ற  தென்கயிலை ஆதீனம் மீது, இனந்தெரியாத பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் புத்த பிக்கொருவர் தேநீர் சாயங்களை ஊற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து, இவ்வாறு தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் அதனை கண்டுகொள்ளாத இலங்கை அரசு காவல்துறைக்கு மேலதிகமாக இராணுவத்தை குவித்து தமிழ் மக்களை அச்சுறுத்தி விரட்டியிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்து அமைப்புக்கள் ஒன்று கூடி ஆராயவுள்ளன.
அத்துடன் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவுமுள்ளன.

No comments