புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேருக்கு சிறை!

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இவர்களை மருத்துவ பரிசோதனையின் பின்னர், யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கையும் கடற்படையினர் முன்னெடுத்தனர்.


நேற்று பிற்பகல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து முனிவேல்  என்பவருக்கு சொந்தமான விசைபடகில்  மீன் பிடிக்க சென்ற முனிவேல்,ஸ்டிபன்ராஜ், மணிகண்டன், குமார்ஆகிய நான்கு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்து மீனவர்களை கைது செய்தும் படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன் மீனவர்களை வரும் ஆகஸ்ட் 8ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்...

No comments