தேவாலயம் மீள திறக்கப்பட்டது:முஸ்லீம்களிற்கு பன்றித்தலை?




நீர்கொழும்பு - கட்டுவாபிட்டியவை அண்மித்த பகுதியான டீன் சந்தியில் நேற்றையதினம் சிலர் இஸ்லாமியர்களின் கடைகளை இன்று திறக்க வேண்டாமென்று அச்சுறுத்திறுத்தியதாக கூறப்படுகிறது.
இன்று காலை அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளில் பன்றி தலைகளை தொங்கவிடப்படிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்

இதனிடையே உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று மீள் திறக்கப்பட்டது.

கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

அதில் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததும் அதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருந்தமையும் தெரிந்ததே.

No comments