வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல்

கடந்த காலத்தில் நாட்டில் நிலவி வந்த யுத்த சூழ்நிலை காரணமாக யுத்த பிரதேசங்களாக இருந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் நியமனம் பெறும் வைத்தியர்கள் வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியல் மூலம் ஒரு வருடகாலத்தில் இடமாற்றம் பெறலாம் என சலுகை வழங்கப்பட்டது. யுத்த காலத்தில் இது வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பெரும் வாய்ப்பை வழங்கியிருந்தது.

ஒரு வருட காலத்தில் இடமாற்றம் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பல வைத்தியர்கள் வந்து சேவையாற்றினர்.

ஆனால் யுத்தம் முடிவடைந்து 10 வருடகாலம் முடிவடைந்த நிலையிலும் சுகாதார அமைச்சானது வடக்கு கிழக்குக்கு தனியான வைத்தியர் இடமாற்ற பட்டியலினை நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கு சுகாதார வழங்கலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

சாதாரணமாக ஒரு வைத்தியர் ஒரு வைத்தியசாலைக்கு நியமழக்கப்படின் கட்டாயமாக 4 வருடங்கள் சேவையாற்றிய பின் இடமாற்றம் பெற முடியும். சேவையின் மூப்பின் அடிப்படையில் தான் அவர் புதிய நிலையத்தினை தெரிவுசெய்ய முடியும். ஆனால் இந்த விசேட இடாற்ற பட்டியல் மூலம் ஒருவருட காலத்தில் இடமாற்றம் பெறும் வாய்ப்புக்கிடைக்கிறது. இதனால் சில விசேட திறன்களை இந்த வைத்தியர்களுக்கு பயிற்றுவித்தபின் சிறித காலத்தில் இவர்கள் இடமாற்றம் பெறுவதனால் சுகாதார சேவைகள் பெருமளவில் பாதிப்படைகின்றன என வடக்கு கிழக்கினை சேர்ந்த வைத்தியர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மேலும் வடமாகாண அளுநர் மற்றும் எமது மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த விசேட பட்டியலினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்து எமது சுகாதார சேவைகள் பதிப்புறாவண்ணம் மக்களுக்கு கிடைக்க வழிசமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments