உயிரிழந்தவர் செல்வரத்தினம் கவிகஜன்?


மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர் கச்சாயை சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் எனும் 23 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் மரணமடைந்த நிலையில் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்திருந்தான். கவிகஜன் அந்த குடும்பத்தின் ஒரே ஒரு மகன் எனவும் சொல்லப்படுகின்றது.

இதனிடையே கொடிகாமத்தில் செயற்படும் ஜக்கிய தேசிய கட்சி பிரமுகர் சர்வா என்பவரது ஆதரவாளரென குறித்த இளைஞன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுடன் பயணித்த ஏனைய ஜவர் தப்பித்துள்ளதாக சொல்லப்படுகின்ற போதும் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.

No comments