வவு. பேருந்து நிலையத்தில் கிடந்த மர்மப் பொதி



வவுனியா- பழைய பேருந்து நிலையத்தில் உாிமைகோரப்படாத நிலையில் கிடந்த பொதி ஒன்றினால்  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டு பொதி மீட்கப்பட்டது.

நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்து ஏறுமிடத்தில் பொலித்தீன் ஒன்றினால் முழுமையாக சுற்றப்பட்ட பொதி ஒன்று நீண்ட நேரமாக அவ்விடத்தில் காணப்பட்டுள்ளது.

குறித்த பொதி தொடர்பில் அருகில் இருந்த வர்த்தகர்கள் விசாரித்த நிலையில் எவரும் உரிமை கோராமையால் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா பொலிசார் குறித்த பொதி தொடர்பில் சந்தேகம் அடைந்து விசேட அதிரடிப் படையினருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

அங்கு வருகை தந்த இராணுவத்தினர் மற்றும் விசேட அதிடிப்படையினர் குறித்த பொதியை மீட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் அதனை முழுமையாக சோதனையிட்டனர். இதன்போது குறித்த பொதியில் ஆடைகள் காணப்பட்டதுடன் அவை வெளிநாடு ஒன்றில் இருந்து வந்தவரால் கொண்டு வந்திருந்தமைக்கான ஆதாரங்கள் காணப்பட்டன.

குறித்த பொதியானது வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்த சரவணன் ஆரணி என்பருடையது என தெரியவந்துள்ளது. உரிமையாளர் இல்லாமையால் சோதனையின் பின் குறித்த பொதி வவுனியா பொலிசாரினால் எடுத்துச் செல்லப்பட்டது.

இதனால் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சுமார் அரைமணி நேரம் பதற்றமான நிலமை காணப்பட்டது. இதேவேளை, குறித்த பொதியை தவறவிட்டு சென்றவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆதாரத்தினை காட்டி பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

No comments