நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டதுஉயிர்த்த ஞாயிறு தின தக்குதலால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் மக்களின் பிரார்த்தனைக்காக திறக்கப்பட்டது.

பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை பிரார்த்தனைகளை நடத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி புனித ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் முற்றாக சேதமடைந்திருந்தது. 

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் சரியாக மூன்றுமாதங்கள் கடந்தநிலையில் இலங்கை இராணுவத்தினரால் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பிரார்த்தனைக்காய் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களிடம் கையளிக்கப்பட்டு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வை தொடர்ந்து கடுவப்பிட்டிய கத்தோலிக்க அறநெறிப்பாடசாலைக்கான கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

அத்துடன் கட்டுவப்பிட்டி பகுதியில் வீடுகள் அற்றவர்கள் குறித்து அவதானம் செலுத்தி அவர்களுக்கான திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை இன்றயதினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments