கீரிமலையில் குப்பை கொட்ட தடை?
இந்துக்களது புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கீரிமலை நகுலேஸ்வரம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பகுதிகளிற்கு இடையில் கழிவுகளை கொட்ட தமிழரசின் வலிவடக்கு பிரதேசசபை களமிறங்கியுள்ளது. இதன் மூலம் தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்து தமிழினத்தை அழிக்க அரசாங்கமும் கைக்கூலிகளும் முன்னெடுக்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளியெறியத் தயாராகுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.ஊடக அமையத்தில் யாழ்.பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் இரவீந்திரன் இன்று இரவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் ஒட்டுமொத்த கழிவுகளையும் இப்பகுதியில் கொட்ட முற்படுகின்றார்கள்.ஒருபுறம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மறுபுறம் காங்கேசன்துறை துறைமுகமென அபிவிருத்த பற்றி பேசிக்கொண்டு குப்பைகளை கொட்டி அப்பகுதியை நாறடிக்கவுள்ளனர்.
இவ்வாhறான குப்பை கொட்டப்பட்டால் அப்பகுதியில் மக்கள் வாழ்வது கேள்விக்குறியாகிவிடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த நல்லிணக்கபுரம் மக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.அதற்கு வலி.வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தன் குப்பை கொட்டும் இடத்தில் எதற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment