யாழில் நிலக்சனின் 12வது நினைவேந்தல்!


இலங்கைப்படைகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் 12வது நினைவேந்தல் யாழில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

ஓகஸ்ட் 01ம் திகதி 2007 ம் ஆண்டினில் அதிகாலை 5 மணியளவில் அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இராணுவப்புலனாய்வு பிரிவினாரால் அவன் படுகொலை செய்யப்பட்டான்.

நிலக்சன் 12வது நினைவேந்தல் யாழ்.நகரிலுள்ள ஊடக சுதந்திரத்திற்காக தமது இன்னுயிரை ஈந்த ஊடகவியலாளர்கள் நினைவு தூபி பகுதியில் எதிர்வரும் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments