5G இற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனம் ஒன்றினால் நடைமுறைப்படுத்தப்படும் 5G தொழிநுட்பத்திற்கு எதிா்ப்பு தொிவித்து யாழ்.கஸ்த்துாாியாா் வீதியில் இன்று மக்கள் எதிா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனா்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் இன்று மதியம் ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அனுமதியளித்தமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை

முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 5ஜி அலைக்கற்றைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தால் எதிர்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்படுமென்று கருதியே எதிர்த்து வருவதாக

மக்கள் கூறுகின்றனர். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் நகரின் பல வீதிகளிலும் தூண்கள் நிறுத்தப்படுகின்றன. தூண்கள் நிறுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றதால் சில இடங்களில் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கின்ற போதும்

சில இடங்களில் தொடர்ந்தும் கோபுரம் அமைக்கும் பணி தொடர்கிறது. இந்தச் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயினும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து மாநகர சபைக்கு எதிராக தொடர் போராட்டங்களை பல்வெறு வடிவங்களில் மேற்கொள்ளப் போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர்.இதேவேளை,

கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணம் குருநகரில் இதேபோன்று 5G  அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments