சுவர் இடிந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 15பேர் பலி!

இந்தியாவின் பெருநகரமான புனேயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து  4 குழந்தைகள் உட்பட 15 பேர்பலியாகியுள்ளது அப்பகுதியைசோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 இரண்டு நாட்களாக மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே உள்ளிட்ட பெருநகரங்களில் மழை பெய்து வருகிறது. புனே நகரில் பெருமழை காரணமாக, நேற்றிரவு சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடியது. அங்குள்ள கோந்த்வா பகுதியிலுள்ள ஆல்கன் ஸ்டைலஸ் ஹவுசிங் சொசைட்டியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அச்சுவருக்கு அருகில் இருந்த  குடிசைப் பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் அங்கு வாழ்ந்துவந்த 4 குழந்தைகள் மற்றும்  பெண் ஒருவர்  உட்பட 15 பேர் பலியானதாக  மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

No comments