கஞ்சா குகையாகின்றது வடமராட்சி?


இலங்கை காவல்துறையினரின் பங்கெடுப்போடு நடப்பதாக சொல்லப்படும் கஞ்சா கடத்தல்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் அம்பலப்படுத்திவருகின்றனர்.

அவ்வகையில் நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா பொதுமக்களின் தகவல் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று நண்பகல் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

6 சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த குறித்த கஞ்சா பொதிகள் வேறு இடத்துக்கு நகர்த்துவதற்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே வடமராட்சி கெருடாவில் பகுதியில் இதே போன்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments