வெளிவருகிறது மின்னிலக்க நாணயம்!

முகநூல் நிறுவனம் லிபரா (Libra) எனும் புதிய மின்னிலக்க நாணயத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த மின்னிலக்க நாணயம் அடுத்த ஆண்டு மக்களின் புழக்கத்திற்கு வரவுள்ளது.

உலக அளவில் நடைபெறும் பரிவர்த்தனையை இந்த நாணயம் குறைந்த விலையில்  எளிமையாக்குவதே நோக்கம் எனக்
கூறப்பட்டுள்ளது.

குறித்த நாணயத்தைச் சேமிக்க, செலவிட, பரிவர்த்தனை செய்ய ஏதுவாக கலிபரா (Calibra) என்ற மின்னிலக்க பணப்பையையும் முகநூல் உருவாக்கியுள்ளது.  முகநூலின் முகநூல் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் ஊடாக கலிபரா இணைக்கப்படவுள்ளது.

No comments