தவராசாவால் பொலிஸில் முறைப்பாடு?


கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர்களான கிஸ்புல்லா, அசாத் சாலி, ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தப் பிரிவிலேயே கிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டை தவராசா பதிவு செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக தவராசா தெரிவித்ததாவது..
முகநூலில் காணிப்படும் கிஸ்புல்லாவின் உரையின் காணொலியொன்றில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த ஓர் வழக்கு தொடர்பாக தான் நீதிபதியை மாற்றி தனக்கு சாதகமாக நீதிபதியைக் கொண்டு வந்து எழுதடா தீர்ப்பு என்று எழுத வைத்ததாக அவ்வுரையில் இருக்கின்றது.
இது இலங்கையின் நீதித்துறையையே அதன் சுதந்திரத்தையும் அதன் கௌரவத்தையும் கேள்விக்குறியாக்கும் ஒரு விடயம். ஆதலனால் இது தொடர்பாக உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதோடு கிஸ்புல்லா அவர்கள் தனது அரசியல் பதவிகளை பாவித்து அல்லது துஸ்பிரயோகம் செய்து நீதித்துறை மீதும் சட்டம் ஒழுங்குத் துறை மீதும் வேறு ஏதாவது அழுத்தங்களை இதேபோல் பிரயோகித்திருக்கின்றாரா என்பதை ஆராயும் படியும் முறைப்பாட்டில் தவராசா கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
இதே போன்று எழுத்திலான முறைப்பாடு ஒன்றும் நீதிச்சேவை ஆணைக்குழவிற்கும் இன்று என்னால் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உரையின் காணொலிப் பிரதிகள் பொலிஸ் தலைமைக் காரியாலயத்திற்கும் நீதிச் சேவைச் ஆணைக்குழுவிற்கும் வழங்கப்பட்டுள்ளது என்றும் தவசராசா தெரிவிததுள்ளார்.

No comments