தலையிட அனுமதிக்க மாட்டேன்:ரணில்!


இலங்கை ஜனாதிபதி அமைச்சரவையை கூட்டாதிருப்பதன் ஊடாக அதனை கலைக்க முடியாது. அமைச்சரவைக்கு, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகளில் தலையிட முடியாது.ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயன்முறைகள் உள்ளன. எவரின் குறுக்கீடுகளையும் நான் அனுமதிக்க மாட்டேனென இலங்கைப் பிரதமர் ரணில் சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பு அலரிமாளிகையில் இன்று (11) நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதனை அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இலங்கையர் ஒருவராயின், நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமையை விளங்கிக் கொண்டு பெரும்பான்மை யார்? சிறுபான்மை யார்? என்பதை விளங்கி, சகலருடனும் இணைந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவே முன்வரவேண்டும் என இலங்கைப்பிபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தாலும், சர்வதேச ரீதியில் பெரும்பான்மையினர் எனவும், இதனால், யாருடையவும் அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்கள் கீழ்படிய மாட்டார்கள் எனவும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா கடந்த வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments