வாய்க்கொழுப்பில் ரஞ்சித்; வலிந்து கட்டும் வழக்குகள்

தமிழகம்  தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பா.ரஞ்சித்  ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராஜ ராஜ சோழனை தரக்குறைவாக பேசிய பா.ரஞ்சித் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில்தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் காலத்தில் தான் பெண்களை தேவதாசிகளாக வைத்திருந்ததாகவும், கர்நாடக கோலார் தங்க கிணற்றுக்கு அடிமைகளை விற்றதாகவும் எனவே அவருடைய ஆட்சி காலம் இருண்ட காலம் என்று பேசியதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் கட்டணங்களும் தெரிவத்ததோடு சமூகவலைத்தளங்களிலும் ரஞ்சித்துக்கு எதிரான கோசங்ககள் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன, அந்த வகையில் திமுக முக்கிய உறுப்பினர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது பல்வேறு பகுதிகளில் ரஞ்சித்துக்கு எதிராக காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் பதியப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நடிகர் கருணாஸ்இன் முக்குலத்தோர் புலிப்படை, மற்றும் இந்து முன்னணியினர் இதில் தீவிரம் காட்டி வருகின்றனர்,
அதே வேளை இவர் எங்கு சர்சை பேச்சை பேசினாரோ அதாவது  தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது மேலுல் பரபரப்பை தூண்டியுள்ளது.

No comments