சங்ரில்லா மீண்டும் ஆரம்பம்!

கடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் மூடப்பட்டிருந்த சங்ரில்லா விடுதியின் பணிகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் சங்ரில்லா விடுதி நிர்வாகத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மேலும் சிரமமான காலப்பகுதியில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறித்த அறிக்கையில் சங்ரில்லா நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments