சோரம்போன சாக்கடை அரசியலில் முக்கோணப் போட்டியும் மௌன ராகமும் - பனங்காட்டான்

சிங்கள தேசத்தில் முக்கோண அரசியல் போட்டி. மைத்திரியும் ரணிலும் உலகம் சுற்ற மகிந்த அறுவடைக்குத் தயாராகிறார். ஏமாற்றப்பட்டு எல்லாமிழந்து நிற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு
இப்போது இந்தியப் பிரதமர் மோடியே நம்பிக்கை நட்சத்திரம். அதற்கும் உள்வீட்டுக்குள்ளேயே ஆப்பு வைக்கிறார் எம்.பி ஒருவர்.

இனிவரும் மாதங்கள் - அடுத்து வரும் ஒரு வருட காலம் இலங்கையில் தேர்தல்களின் காலம்.

மாகாண சபைகள்இ ஜனாதிபதிஇ நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் வரிசையில் முறைப்படி முதலில் நடைபெற வேண்டியது மாகாண சபைகள் தேர்தல்.

ஒன்பது மாகாண சபைகளுள் ஏழின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதால் அவை இப்போது ஆளுனர்கள் ஆட்சியிலுள்ளன. ஜனாதிபதியின் தனிப்பட்ட தெரிவில் இவர்கள் நியமனமானதால்இ ஏழு மாகாண சபைகளும் பொம்மை ஆட்சியிலுள்ளன.

1987ஆம் ஆண்டின் இலங்கை - இந்திய ஒப்பந்தம் வடகீழ் மாகாண சபை உருவாக்கத்துக்கு தற்காலிகமாக வழிவகுத்தது. ஆனால்இ சிங்கள நீதி நிர்வாகம் அரசமைப்பின் ஓட்டையை பயன்படுத்தி அதனை இரண்டாகப் பிரித்தது.

வடமாகாண சபைக்கான முதலாவது தேர்தல் 26 ஆண்டுகளின் பின்னர் 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றுஇ கடந்தாண்டு ஒக்டோபரில் ஆயுளை முடித்துக் கொண்டது.

ஏழு மாகாணங்களுக்குமான தேர்தல்கள் எப்போது என்று எவருக்குமே தெரியாது.

இந்தாண்டின் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு யூலை - ஆகஸ்ட் முற்பகுதிக்குள் இடம்பெற வேண்டும். ஜனாதிபதி விரும்பினால் அடுத்தாண்டில் வரும் முதல் ஆறு மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இதற்கான தேர்தலை நடத்த சட்டத்தில் இடமுண்டு.

பெயரளவில் நல்லாட்சி என்ற இரு கட்சி இணைந்த அரசாங்கமே 2015 முதல் செயற்பாட்டில் இருந்தாலும்இ ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே அணியில் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் இவர்கள் இருவரும் இப்போது ஒருவரையொருவர் முகம் பார்ப்பதில்லை. இதனால்இ பாதுகாப்புச் சபை கூட்டங்கள்இ மந்திரி சபைக் கூட்டங்கள் என்பன ஜனாதிபதியால் பல தடவை தடை செய்யப்பட்டன.

கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமர் ரணிலை பதவி நீக்கிஇ தமது முன்னாள் சகாவான மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கி அரசியல் சதிராட்டம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரி நடத்தினாராயினும்இ அதில் அவரே முகங்குப்புற விழ நேர்ந்தது.

ஐம்பது நாட்களுக்குப் பின்னர் பிரதமர் கதிரை மீண்டும் ரணில் வசமாகஇ மகிந்த திடுதிப்பென எதிர்க்கட்சி தலைவரானார்.

நான்காண்டுகளுக்கு மேல் வரப்பிரசாதமாகக் கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்த சம்பந்தன் அப்பதவியை இழந்தார். ஆயினும்இ அப்பதவிக்கான பங்களாவையும்இ அரச வாகனத்தையும் அவர் தொடர்ந்து வைத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டதை இங்கு கவனிக்க வேண்டும்.

அரசியற் கதிரைகள் சக்கடத்தாரின் குதிரைபோல இடம்மாறி ஓடிக்கொண்டிருக்கின்றன. அரசியல் அனுபவமும் ஆற்றலுமில்லாத ஜனாதிபதி மைத்திரி தம்மைச் சுற்றி நரி வலைகளை அமைத்து நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.

இப்போது மகிந்தவும் இவரோடு இல்லைஇ ரணிலும் இல்லை. தனியான அஞ்சலோட்டத்தில் இவர்.

இதிலொன்றுஇ சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி தமக்குரிய செல்வாக்கை மதிப்பீடு செய்ய நினைப்பது. இதனூடாக ரணிலையும் மகிந்தவையும் அடித்து வீழ்த்தலாமென நப்பாசை.

இதன் வழியாக நிலைமை சாதகமாகத் தெரிந்தால் ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்துவார். அல்லது நாடாளுமன்றத்தை மக்கள் கருத்துக் கணிப்பை சாதகமாக்கி கலைத்துவிட்டு பொதுத்தேர்தலை முதலில் நடத்துவார்.

மொத்தத்தில்இ மாகாண சபைகளுக்கான தேர்தல் என்பது மூன்றாவது இடத்தில்தான் உள்ளது.

சாமஇ பேதஇ தானஇ தண்டம் என்னும் நான்கையும் பயன்படுத்தி படுதோல்வி கண்ட நிலையிலுள்ள மைத்திரிஇ அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலும் புரியாமலும் தடுமாறுவதை உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளும் நன்கு கவனித்து வருகின்றன.

இதனாற்தான் போலும் தலதா மாளிகை (சிங்கள பௌத்த உயர்பீடம் - மகாசங்கம்) சொல்வதையே அனைவரும் செவிமடுத்து அதன்படி செயற்பட வேண்டுமென இவர் விடுத்துள்ள அறிவுரை போன்ற உத்தரவைப் பார்க்க முடிகிறது.

காவி உடைகளை முன்னிறுத்தி அவர்களின் ஆசீர்வாதத்துடனேயே அரசியலை வழிநடத்திய சிங்கள பௌத்த பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவை புத்தரகித்த தேரோவும்இ சோமராம தேரோவும் என்ன செய்தார்கள் என்பது மைத்திரிபால மறந்திருக்க மாட்டார்.

வீடு பற்றி எரியும்போது அதன் உரித்தாளர்களான கணவனும் மனைவியும் ஊர் சுற்றச் சென்றால் பிள்ளைகள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதுபோல ஜனாதிபதியும் பிரதமரும் இப்போது நடந்து கொள்கிறார்கள்.

இருவரும் வாராவாரம் வெளிநாடு செல்கிறார்கள். ஒருவர் கிழக்கு நோக்கிச் சென்றால்இ மற்றவர் மேற்கு நோக்கிச் செல்கிறார். வெளிநாடுகளில்கூட தப்பித் தவறியாவது ஒருவரையொருவர் சந்தித்து விடக்கூடாதென்பதில் மிகுந்த அவதானமாக உள்ளனர்.

மந்திரி சபையானது தனித்து ஒரு கட்சி - ஐக்கிய தேசிய கட்சியினரை மட்டுமே கொண்டதாக இப்பேர்து உள்ளது. ஆனாலும்இ அவர்கள் தங்களுக்குள் பிணக்குப்படுவது மட்டுமன்றிஇ ஊடகங்க;டாக அறிக்கைப் போர் நடத்தி கழுத்தறுப்புச் செய்கிறார்கள்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலையடுத்து கூண்டோடு அமைச்சர் பதவிகளைத் துறந்த ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களின் ஒற்றுமையை அனைவருமே பாராட்டினார்கள். சிங்களத் தலைமைகள் இது கண்டு அச்சத்தால் நிலைகுலைந்தன.

ஆனால்இ இவர்களுள் இருவர் பல்டி அடித்துவிட்டு முன்னைய அமைச்சர் பதவிகளை மீளப்பெற்றுவிட்டனர். கபீர் காசீம்இ எம்.எச்.எம்.கலீம் என்னும் இவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் மீண்டும் அமைச்சர்களாகியதைவிட முக்கியமான விநோதம் என்னவெனில்இ இவர்களின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இவர்கள் மீள அமைச்சர்களாகியது தமக்குத் தெரியாதென்று பகிரங்கமாகக் கூறியிருப்பதே.

ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தால்இ மற்றைய முஸ்லிம் அமைச்சர்களும் மௌ;ள மௌ;ள மீண்டும் தங்கள் கதிரைகளில் அமர்வதுகூட பிரதமருக்குத் தெரியாது போகலாம்.

சிங்கள அரசியல் அரங்கின் முக்கோணப் போட்டியை நுணுக்கமாக அணுகினால் ஒரு விடயம் தெரியவரும்.

ஒரே அரசாட்சியைச் சேர்ந்த ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எட்டாம் பொருத்தம். ஒருவரையொருவர் சந்திக்க விரும்பாதது மட்டுமல்ல மெதுமெதுவாக காலை இழுக்கும் வேலையையும் செய்கிறார்கள்.

ஆனால்இ இவர்கள் இருவருக்கும் விரோதியான எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தாம் விரும்பும்போதெல்லாம் ஜனாதிபதியையும் பிரதமரையும் தனித்தனியாகச் சந்தித்து பேச்சு நடத்துகிறார்.

ஜனாதிபதியும் பிரதமரும் வெளிநாடுகளுக்குத் தொடர்ந்து பறந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குச் சந்திக்கக்கூடியவராக நாட்டில் இருப்பவர் மகிந்த மட்டுமே. இதனால் இவரது செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது.

இனிஇ தமிழர் அரசியல் பக்கம் சற்றுப் பார்ப்போம்.

இரண்டாவது தடவையாகவும் இந்தியப் பிரதமராகியுள்ள மோடியே இப்போது கூட்டமைப்பின் நம்பிக்கை நட்சத்திரம்.

புதுடில்லிக்கு வாருங்கள்இ பேசுவோம் என்ற மோடியின் அழைப்பில் கரைந்து குழைந்து போயுள்ளனர் இவர்கள்.

இன்னமும் திகதி வழங்கப்படவில்லையாயினும் நால்வருக்கு மட்டுமே அழைப்பு என்பதால் சம்பந்தன்இ சுமந்திரன்இ மாவை சேனாதிராஜாஇ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அழைப்புத் திகதியை வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர். எண்ணிக்கை நான்கு என்பதால் புளொட் சித்தார்த்தன் வெளியே.

இதற்கிடையே கூட்டமைப்பின் எம்.பி.யான சரவணபவன்இ மோடியால் என்ன பயன் என்று பகிரங்கமாக எழுப்பிய கேள்வி கூட்டமைப்புக்குள் அச்சம் கலந்த பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது உதயன் தினசரிக்கு எதிராக சுமந்திரன் புதிய சுதந்திரனையும்இ மாவை சேனாதிராஜா புதிய ஈழநாதத்தையும் வெளியிட ஆரம்பித்துள்ளதே சரவணபவனுக்கு கூட்டமைப்பின் மீதான கொதிப்பு என்கிறார்கள் உள்வீட்டுக்காரர்கள். இதன் பிரதிபலிப்பே மோடியின் சந்திப்பை நையாண்டி செய்த அவரது கருத்து என்கிறார்கள் இவர்கள்.

ஆனாலும் சரவணபவனிடம் இதுபற்றி விளக்கம் கேட்கவோஇ விசாரணை நடத்தவோ சம்பந்தன் தயாரில்லை. (சரவணபவனின் மனைவி வழியாக சம்பந்தனுடன் உறவுண்டு என்றும் கூறப்படுகிறது).

ஏற்கனவே சிவசக்தி ஆனந்தன்இ வியாழேந்திரன் ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது ஆளாக சரவணபவனையும் இழக்க கூட்டமைப்பு விரும்பவில்லையாம். தேர்தல்கள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கொஞ்சக் காலத்துக்கு மௌன ராகமே நல்லதென சம்பந்தன் கருதுகிறார்.

நம்பிச் சென்ற பிரதமர் ரணில் நட்டாற்றில் விட்டுள்ளார். வாக்குச் சேர்த்து கதிரையிலேற்றிய ஜனாதிபதி வாலைக் காட்டுகிறார்.

இந்த நெருக்கடிகளுக்குள் புதிய நெருக்கடியையும் உருவாக்குவதா? வரப்போகும் தேர்தல்களும் இதற்கு மௌனமாகவே பதிலளிக்கும்.

No comments