மோதி தள்ளியவரை பாதுகாத்தது இலங்கை காவல்துறை?


யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவர் உள்பட ஐவரை முச்சக்கர வண்டி தள்ளி வீழ்த்தியுள்ளது. இதனிடையே குறித்த வாகனச்சாரதி, வாகனத்தைக்கைவிட்டுத் தப்பிச்சென்றார எனக்கூறப்பட்ட போதும் இலங்கை காவல்துறை அவரை பாதுகாப்பாக அழைத்துச்சென்றிருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அருகாகவுள்ள ஒஸ்மானியர்க்கல்லூரி மாணவர்களே மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அவர்கள் இருவர் உள்பட மூவர் வீதியின் அருகில் இருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.விபத்தில் மாணவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொட்டடி - ஒஸ்மானியக் கல்லூரி வீதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த ஓட்டோ சாரதி பிரபல கஞ்சா வர்த்தகரெனவும் அருகாகவுள்ள பொம்மை வெளியினை சேர்ந்தவரெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபரை காப்பாற்றவே காவல்துறை அழைத்து சென்றிருந்ததாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

No comments