முகிலன் எங்கே? சென்னையில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவர் கதி என்ன என கேட்டு சென்னையில் இன்று (01.06.2019)  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஸ்டெர்லைட் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை வெளியிட்ட முகிலன் பின்னர் வீடு திரும்பவில்லை.

 காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (01.06.2019) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments