வடகொரியவுக்குள் அதிரடியாக நுழைந்த ட்ரம்ப்! உலக அரங்கின் வரலாற்று நிகழ்வு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் வடகொரிய அதிபர்  கிம் ஜாங் அன்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

 ஜி20 உச்சி மாநாட்டில் இருவரும் கலந்துகொண்டுள்ளபோது  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்விருப்பத்தின்பேரிலே இந்தசந்திப்பினை
தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் ஏற்பாடு செய்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் சமாதானப் பகுதியாக அறிவிக்கப்பட்ட வடகொரியாவின்  எல்லைக்குள் எண்ணி 20 அடிகளை எடுத்துவைத்து  டிரம்ப் உள்நுழைந்தார். அங்கு எல்லையில் வந்து காத்திருந்த கிம் ஜாங் வந்து சந்தித்தார்.

உலக அரங்கில் பெரும் வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படும் இந்நிகழ்வில் இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்த சந்திப்பின்போது தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் உடனிருந்தார். வடகொரியா எல்லைக்குள் அமெரிக்க அதிபர் முதன்முதலாக கால் பதிப்பதால் இந்த சந்திப்பை செய்தியாக்க ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

‘இந்தநாள் உலகத்துக்கு மிகவும் உன்னதமான நாள். இங்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

No comments