அரசின் எச்சரிக்கையைமீறி ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக அரசு அறிவித்து வர்த்தமானி வெளியிட்டுள்ள போதிலும் அதை புறந்தள்ளி இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் ரயில் ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடருந்து திணைக்களம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
Post a Comment