கூட்டமைப்பு கூழைக்கும்பிடு:மகிந்தவோ கெத்து?


தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இந்தியப்பிரதமர் பேச்சுவார்த்தை என்பது இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தலைமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே உள்ளது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆதரவாளர்களை கொண்டாட வைத்துள்ளது.

எனினும் வழமை போலவே நடைபெற்ற சந்திப்பு என்பதற்கப்பால் மோடி முன்னர் கூட்டமைப்பினர் காட்டிய விசுவாசமும் கதிரைகளில் அமர்ந்திருந்த பௌவியமும் பேசுபொருளாகியிருக்கின்றது.

இன்று மோடியை சந்தித்த மகிந்த தரப்பு தெனாவட்டாக இருக்க கூட்டபை;போ கூழை கும்பிடு போட்டது எதற்கென கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே இது வரை கூட்டமைப்பினை இந்திய பிரதமர்கள் அழைத்துபேசிய காலங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

1)கடந்த 2010,யூலை மாதம் அப்போதய இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்தேசியகூட்டமைப்பை அழைத்து பேசினார்,
2)கடந்த 2014,ஆகஷ்ட் 25ல் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தமிழ்தேசியகூட்டமைப்பை அழைத்து பேசினார்.
3)கடந்த 2016,மே மாதம் சம்மந்தன் பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது
4)கடந்த 2018,செப்படம்பர் புது டில்லியில் சம்மந்தன் மோடி சந்திப்பு இடம்பெற்றது

5) இன்று 2019,யூண் 09 கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்தியபிரதமர் நரேந்திர மோடி சந்திப்பில் தமிழ்தேசியகூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்வாறெல்லாம் பேசி பேசி கண்ட பலன் என்ன என கேள்வி எழுப்பபட்டுள்ளது.

No comments