கூட்டமைப்பிற்கு மாற்றீடு இல்லை?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அமைப்பொன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை இன்றைய நிலையில் காணவில்லை. ஏனெனில் கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக் கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒற்றுமையைக் காணவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில் மாற்று அணி சாத்தியமில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிலிருந்து தமிழீழ மக்கள் விடுதலைக்கழக அமைப்பு வெளியேறி மாற்று அணியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கூட்டமைப்பு தவறு விடுகிற போது ஒரு மாற்று அமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளைக் காணவில்லை. ஏனென்றால் இன்று கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கக்கூடிய கட்சிகள் மத்தியில் கூட ஒரு ஒற்றுமையை நான் காணவில்லை. 

சரியான ஐனநாயகமான சூழ்நிலை தமிழ் மக்கள் மத்தியில் இருக்க வேண்டும். இப்போதைய நிலையில் அதற்காக ஒரு மாற்றை என்னால் பார்க்க முடியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டமைப்பிற்குள் பிழை இல்லாமல் இல்லை. கூட்டமைப்பை பொறுத்தமட்டில் பல பிழைகள் இருக்கின்றன எனவும் சித்தார்த்தன் ஏற்றுக்கொண்டுள்ளார். 

No comments